Shunya mudra benefits
சூன்ய முத்திரை பலன்கள்Shunya mudra benefits
சூன்ய முத்திரை பலன்கள்
நடு விரல்நுனி கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொட்டுக் கொண்டும் கட்டைவிரல் நடுவிரலில் இலேசாக அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கும் நிலை சூன்யம் முத்திரையாகும் .
கட்டை விரல் நெருப்பையும் நடுவிரல் ஆகாயம் அல்லது வெட்ட வெளியையும் குறிக்கும் . இதில் நெருப்பின் சக்தி ஓங்கி உள்ளது. ஆகாயம் முத்திரை எதிர்ப்பதமானது இந்த சூன்ய முத்திரை . ஆகாயம் முத்திரையில் இடைவெளி அதிகம் இருக்கும் . இதில் இடைவெளி மிகவும் குறைந்து போய் ஒன்றுமே இல்லாமல் போவதுதான் சூன்ய முத்திரை .
ஆகாய மூலப் பொருள் நெருப்பினால் அடக்கப்படுகிறது . அதன் விளைவாக வாயு அக்னி நீர் மண் போன்ற மூலப் பொருட்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த முத்திரை உடலிலுள்ள அதிகப்படியான இடைவெளியைக் குறைக்கிறது . இம்முத்திரை வாதத்தைக் குறைக்கிறது . வாத தோஷமுள்ளவர்களுக்கு இம்முத்திரை ஒரு வரப்பிரசாதம் .
உடலில் உள்ள இடைவேளி அதிகமாவதால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன . அப்பாதிப்புகள் அனைத்தையும் இம்முத்திரை சீர் செய்கிறது . ஆகாயம் என்ற வெட்டவெளி சப்தத்துடன் அதாவது காதுடன் தொடர்பு கொண்டது . காது சம்பந்தமான அனைத்துப் பாதிப்புகளையும் இம்முத்திரை சீர் செய்கிறது .
சூன்ய முத்திரையின் பலன்கள்
1 . காதோடு சம்பந்தப்பட்டது இம்முத்திரை . காதில் அதிகப்படியான இடைவெளி இருந்தால் காதுவலி காதில் இரைச்சல் சீழ் வடிதல் காதுகேளாமை காதின் பாதிப்பினால் ஏற்படும் தலைச்சுற்றல் போன்றவை ஏற்படுகின்றன . இம்முத்திரையை வைத்துக்கொள்ளும் போது இடைவெளி குறைந்து மேற்சொன்ன குறைபாடுகள் தீர்கின்றன . காதில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தொடர்ந்து இம்முத்திரையை வைத்துக் கொள்ள வேண்டும் . பாதிப்பு சரியானதும் முத்திரை வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் .
2 . திடீரென ஏற்படும் காதுவலிக்கு மட்டும் தான் தொடர்ந்து இம்முத்திரை வைத்துக்கொள்ள வேண்டும் .நீண்ட கால காது பிரச்சனைகளுக்கு தினமும் 45 நிமிடங்கள் அல்லது 15 நிமிடங்கள் என்று வைக்கலாம் . எந்த நேரத்திலும் இம்முத்திரையை செய்யலாம் . ஆனால் நீண்ட கால காது நோய்களுக்கு கூட நோய்க் குறிகள் குறைந்தவுடன் முத்திரையை நிறுத்திவிட வேண்டும் .
3 . தலை வயிறு மார்பு போன்ற இடங்களில் வெற்றிடம் அல்லது மரத்துப் போகும் தன்மை ஏற்படும்போது இந்த முத்திரையை உபயோகப்படுத்தலாம் .
4 . விமானப் பயணம் செய்யும்போது விமானம் மேலே ஏறும்போது ( TAKE OFF ) கீழே இறங்கும் ( LANDING ) போதும் காது அடைத்துக்கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும் . அந்தச் சமயங்களில் இம்முத்திரையை வைத்துக் கொண்டால் காதில் பிரச்சனைகள் வராது .
5 . திடீரென பேச்சு பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முத்திரையினால் பேச்சு திரும்ப வருகிறது .
இம்முத்திரையை எந்த நேரத்திலும் செய்யலாம் . ஆனால் இதைச் செய்ய சிறந்த நேரம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை .
குணம் தெரிந்ததும் இம்முத்திரையைச் செய்வதை நிறுத்திவிட வேண்டும் என்பதை மீண்டும் தெறிவித்துக்கொள்கிறோம் .