sankalpa mudra benefits ,

 sankalpa mudra benefits 

சங்கல்ப முத்திரை பலன்கள்

sankalpa mudra benefits
sankalpa mudra benefits

சங்கல்ப முத்திரை பலன்கள்  :- 

இம்முத்திரை காலைவேளையில் தண்ணீர் மட்டும் சிறிது அருந்தி செய்யவும். விடியற்காலை சிறப்பாகும். கோரிக்கை எதுவானாலும் அது விரைந்து நடக்கும். உடல் சக்திகள் கட்டுக்குள் இருக்கும். கண்களை மூடிக்கொண்டு முத்திரையில் அமர்ந்தபடி இலக்கு குறித்து தியானம் செய்யவும். இம்முத்திரை செய்யும் சில நிமிடங்களிலேயே மாற்றம் நிகழ்வதைக் காண்பீர்கள். 

எம்முத்திரையும் கிழக்கு நோக்கி அமர்ந்து செய்யவும். வெரும் தரையில் அமர்ந்து செய்வதைவிட ஒரு துணி விரிப்பின்மீது அமர்ந்து செய்வது நல்லது .
 வெள்ளை, சிவப்பு, மஞ்சள் இதில் ஏதாவது ஒரு வண்ண விரிப்பை பயன்படுத்திக் கொள்ளவும். 

கவனிக்க  உங்களது இலக்குகளை சங்கல்பங்களாக மனதில் பதியும் போதுதான் முழுமையான வெற்றியை வாழ்வில் அடைய முடியும்.

செயல்முறையை காண்க :- 

ஒர் இடத்தில் அமர்ந்து வலதுகால் தொடையின் மீது இடதுகையை மேலேபார்த்தார்போல் வைத்து அதன் மீது வலது கையால் மூடவும் ( படத்தில் உள்ளதை காணவும் ). 

மனதையும், உடலையும் அமைதிப்படுத்தி கண்களை மூடி உங்கள் எதிர்கால கனவுகளை உறுதிசெய்து அதை சங்கல்பமாக பாவித்து தியானியுங்கள் . இதை தினசரி தொடர்ந்து அதிகாலை அல்லது காலை வேளையில் ஒரு 10 நிமிடம் செய்தால் போதும்.  

தாங்கள் எந்த முத்திரை செய்ய முற்ப்பட்டாலும் இந்த முத்திரையை ஒரு நிமிடமாவது தங்கள் கோரிக்கையை நினைத்து அது விரைவில் நடக்கவேண்டும் என்று மனதில் பிராத்தித்து செய்யவும் பிறகு தாங்கள் விரும்பும் முத்திரையை செய்ய முற்ப்பட வெற்றி உண்டாகும் .


No comments:

Post a Comment

நல்லதே நினைப்போம்,நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் . நல் உள்ளங்களுக்கு ஆத்ம வணக்கங்கள் .