Health benefits of Chin mudra,gnana muthra and arivu muthra
ஆரோக்கியம் தரும் ஞானமுத்திரை ,சின்முத்திரை, அறிவுமுத்திரை
சின் முத்திரை ஞான முத்திரை
கட்டை விரலின் நுனியின் மேல் ஆள்காட்டி விரலை வைப்பது சின் முத்திரை எனப்படும் . முனிவர்கள் ஞானிகள் அனைவரும் கைகளில் வைத்திருப்பது இந்த ”சின் முத்திரை” தான் . இதை ஞான முத்திரை என்றும் , தியானம் செய்யும்போது உபயோகிப்பதால் தியான முத்திரை என்றும் அறிவை தூன்டுவதால் அறிவுமுத்திரை என்றும் கூறுவர் .
கட்டை விரல் நெருப்பைக் குறிக்கும் . ஆள்காட்டி விரல் வாயுவைக் குறிக்கும் . இந்த முத்திரையில் காற்றின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாகவும் இருப்பதால் சக்தி குறைவான சிறிய அளவிலான நெருப்பு அணைந்து விடுகிறது எனவே ஒருநிலைப்பட்ட மனம் அமைகிறது .
இந்த முத்திரையினால் நமது அறிவாற்றல் அதிகரிக்கிறது . கட்டை விரலில் பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பிகளின் பிரதிபலிப்பு இடங்கள் உள்ளன . ஆல்காட்டி விரல் கட்டை விரலைத் தொடும் போது இச்சுரப்பிகள் தூண்டப்படுகின்றன இதனால் நமது அறிவு விசாலமடைகிறது .
இம்முத்திரையின் பயன்கள் :-
- நினைவாற்றலை அதிகரித்து மூளையை கூர்மையாக்குகிறது . மாணவர்களுக்குச் சிறந்தது .
- காற்றின் சக்தி அதிகரிப்பதால் உடலில் சுறுசுறுப்பு அதிகமாகிறது . சோம்பேறித்தனமாக மந்தமாக இருக்கும் நிலையில் இம்முத்திரையை வைத்துக்கொண்டால் உடல் சுறுசுறுப்படைகிறது .
- மனம் சோர்வடையும் போது இம்முத்திரையை வைத்தால் மனம் சுறுசுறுப்படைகிறது . புத்துணர்ச்சி கிடைக்கிறது . மனம் ஒருமைப்பாடு அடைகிறது . புதுப்புது சிந்தனைகள் தோன்றுகின்றன.
- அளவுக்கதிகமான தூக்கத்தை குறைக்க உதவுகிறது . தூக்கமின்மை போக்கவும் உதவுகிறது .
- வேலை செய்ய உற்சாகம் பிறக்கிறது . உடல் மனம் இரண்டின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.
- மனம் சம்பந்தப்பட்ட இஸ்டீரியா மனச்சோர்வு மனம் சிதைவு அதிகமான கோபம் இவற்றை சரி செய்ய உதவுகிறது .
- நரம்புகளை உற்சாகப்படுத்துகிறது . நரம்பு சம்பந்தமான குறைகளைத் தீர்க்க உதவுகிறது . நரம்புத் தளர்ச்சி செரிபரல் பால்சி ( CEREBERAL PALSY ) , MULTIPLE SCLEROSIS போன்ற நரம்பு மண்டலக் குறைபாடுகளைத் தீர்க்க உதவுகிறது
- பிட்யூட்டரி தைராய்டு கணையம் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு சுரக்க உதவுகிறது
- விழித்திரையில் ஏற்படும் நோய்களைச் சரி செய்ய உதவுகிறது .
- பக்கவாதம் முகவாதம் போன்ற நோய்களுக்கும் தசை குறைபாடுகளுக்கும் சின்முத்திரை நல்லது . தசைகளுக்கு பலமளிக்கிறது .
- இது குரல் வளத்தை அதிகப்படுத்துகிறது . குரல் பேச்சு இவை குறைவதுபோல் தோன்றினால் இம் முத்திரையை உபயோகிக்கலாம் .
- மெதுவான இதயத் துடிப்பை சீராக்குகிறது .
- நுரையீரலில் ஏற்படும் அதிகமான சளியை குறைக்க உதவுகிறது.
- மூட்டுகளை சுலபமாக அசைய வைக்கிறது . இம்முத்திரை மூட்டு வலியை குறைக்கிறது .
- வாதம் அல்லது வாயுவை அதிகரிக்கிறது . உடலில் அதிகமான வாதம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது .
- நீண்ட காலம் இம் முத்திரையை செய்யும் போது நமது மனக்கண் திறக்கப்படுகிறது .அதாவது மூண்றாவது கண் எனும் நெற்றிக்கண் திறக்கிறது .
- இம் முத்திரையை நீண்ட நாட்கள் செய்யும் போது புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் தன்னால் விலகி விடும் .
இம் முத்திரையை தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்ய வேண்டும் . அல்லது 15 நிமிடங்கள் செய்யலாம் . எந்த சேரத்திலும் செய்யலாம் . ஆனால் இம்முத்திரை செய்ய சிறப்பான நேரம் அதிகாலை 3 மணி முதல் 6 மணி முதல் வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் ,ஆன்மீகருக்கு இரவு 9 மணிமுதல் 12 மணி வரையிலும் சிறந்ததாகும் .
சின் முத்திரையின் சிலமாறுபாடுகள் அறிக
வைராக்கிய முத்திரை
பத்மாசனம் சுகாசனம் வஜ்ராசனம் போன்ற ஆசனங்களில் எதாவது ஒன்றில் அமர்ந்து சின் முத்திரையை இரு முழங்கால்களின் மேல் வைத்துக் கொண்டால் அது வைராக்கிய முத்திரை எனப்படும் .
ஆள் காட்டி விரலின்நுனி கட்டைவிரலின் முதல் கோட்டை தொட்டுக்கொண்டு கட்டைவிரலை ஆள்காட்டி விரல் மேல் வைக்க வேண்டும். உலகத்தின் மேல் உள்ள பற்று குறைந்து மனதில் வைராக்கியம் உண்டாக இம்முத்திரை உதவுகிறது . தவம் செய்யும் ரிஷிகளும் துறவிகளும் இம்முத்திரையினை செய்வதைப் படங்களில் நாம் பார்த்திருப்போம் .
ஞானமுத்திரை
இம்முத்திரையில் விரல்கள் ஆகாயத்தை நோக்கி வைக்கும் போது இது ஞான முத்திரை எனவும் பூமியை நோக்கி வைக்கும் போது சின் முத்திரை எனவும் மாறுபடுகிறது .
இதில் நீட்டிய மூன்று விரல்கள் சத்வம் தமஸ் ரஜஸ் என்ற மூன்று குணங்களை குறிக்கின்றன. கட்டைவிரல் தெய்வ சக்தியையும் ஆள்காட்டிவிரல் மனித சக்தியையும் குறிக்கிறது .
கட்டை விரலில் இருந்து வரும் சக்தியாகப்பட்டது ஆத்ம உணர்ச்சியாகும் . இம்முத்திரையில் இரு சக்திகளும் இணைகின்றன .
கோவில்களில் உள்ள தெய்வங்கள் திருஉருவங்களில் இம்முத்திரையைக் காணலாம் . அது அபய முத்திரை எனப்படுகிறது. புத்தர் திருவுருவத்தில் உள்ள இம்முத்திரையை விதர்க்க முத்திரை என்று கூறுகின்றனர் . ஏசு கிறிஸ்து கையிலும் இம்முத்திரையைக் காணலாம் .
மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபதேசம் செய்யும் போது இம்முத்திரையை வைத்திருப்பதைக் காணலாம் .
ஆக பலப்பல சிறப்புகளைக்கொண்ட சின்முத்திரை வயதுவித்தியாசம் இன்றி யாவரும் கடைபிடிக்கலாம் .
சின் முத்திரை செய்வதற்கு பத்மாசனம் அல்லது வஜ்ஜிராசனம் முறையில் அமர்ந்து பயிற்சி செய்வது மிக நல்லது . வயதானவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் விருப்பமான ஆசனத்தில் அமர்ந்தும் செய்யலாம் .