Sangu Mudra benefits in tamil ,

 Sangu Mudra benefits in tamil 

சங்கு முத்திரை பலன்கள் 
Sangu Mudra benefits in tamil
Sangu Mudra benefits in tamil


சங்கு முத்திரை 

இடதுகை கட்டைவிரலை வலதுகை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மீதி நான்கு விரல்களை வலது உள்ளங்கையின் பின்புறத்தில் வைக்கவும் . வலது கட்டைவிரல்நுனி இடது ஆள்காட்டி விரல்நுனியைத் தொடுமாறு வைக்கவும் . இதுவே சங்கு முத்திரை . இதை வைத்துக்கொள்ளும் போது ” ஓம் ” என்ற மந்திரத்தை பலமுறை கூறினால் அதிக பலன் கிடைக்கும் . 

சங்குபோல் தோற்றமளிப்பதால் இம்முத்திரைக்கு இப்பெயர் வந்தது . வலது கட்டைவிரல் இடது கைவிரல்களால் சூழப்பட்டு இருப்பதால் வெப்பத்தின் சக்தி குறைகிறது . இடது ஆள்காட்டிவிரல்நுனி வலது கட்டைவிரல்நுனியைத் தொடுவதால் காற்றின் சக்தி அதிகரிக்கிறது . கோவில்களில் இம்முத்திரை உபயோகிக்கப்படுகிறது . தொண்டை சம்பந்தமான பல நோய்களைத் தீர்க்க இம்முத்திரை உதவுகிறது. விசுதி சக்கரம் பரிசுத்தமடைகிறது .

இம் முத்திரையின் பலன்கள் : -

  • தைராய்டு பிரச்சனைகள் தீருகின்றன
  • திக்குவாய் குணமாகிறது 
  • குரல் சுத்தமாகவும் இனிமையாகவும் ஆகிறது 
  • இம்முத்திரை தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளையும் தூண்டி விடுகிறது . ஆகவே தொப்புளுக்குக் கீழே ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்க உதவுகிறது .
  • பசி இன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கிறது .
  • உடலிலுள்ள எரிச்சலை கட்டுப்படுத்துகிறது .
  • சுரத்தைக் கட்டுப்படுத்துகிறது . அலர்ஜியால் ஏற்படும் சரும நோய்களை நீக்குகிறது . 

இம்முத்திரையை எந்த நேரத்திலும் வைத்துக்கொள்ளலாம் . எனினும் எந்த முத்திரையையும் மன அமைதியாக உள்ள நேரமான காலை மாலை செய்வதே உத்தமம் .


No comments:

Post a Comment

நல்லதே நினைப்போம்,நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் . நல் உள்ளங்களுக்கு ஆத்ம வணக்கங்கள் .