Specialization of the finger tips , விரல்நுனியின் சிறப்பு
![]() |
Specialization of the fingertips |
விரல்களின் சிறப்பு
தண்டுவடம் வழியே வரும்
நரம்புகளில் சிலது கைகளில் வந்து விரல் நுனிகளில் முடிகிறது . கைக்கும் கழுத்தசைவுக்கும்
நேரடியான தொடர்பு உள்ளது . கழுத்துவலி இருக்குபோது கைகளை அசைப்பது கடினமாக இருக்கும்
. கைகளுக்குப் பயிற்சி கொடுக்கும் போது கழுத்துத் தசையின் இறுக்கம் குறைகிறது . கைவிரல்கள்
நன்றாக விரிந்த நிலையில் வைக்கும் போது மார்பு முன் எலும்புகள் (thorac vertebrae ) விரிவடைகின்றன . நுரையீரல் விரிவடைந்து அதிக காற்றை உள்ளிழுக்க
முடிகிறது .
கைவிரல்கள் இதயம் நுரையீரலுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன . வயதானவர்களுக்கு கைவிரல்களை நன்கு விரிவடையச் செய்ய
முடியாது . இது இதயத்தின் குறைவான செயல் தன்மையை காட்டுகிறது .
கையின் ஒவ்வொரு விரலும்
நுரையீரலின் குறிப்பிட்ட பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது .கட்டைவிரல்
ஆள்காட்டிவிரல் நுரையீரலின் மேற்பகுதியுடனும், நடுவிரல் நுரையீரலின் நடுபகுதியுடனும்,
சிறுவிரல் கீழ்ப்பகுதியுடனும் தொடர்பு கொண்டுள்ளது .
கட்டைவிரல் தெய்வ சக்தியையும்
ஆள்காட்டிவிரல் மனித சக்தியையும் குறிக்கிறது . சின் முத்திரையில் இரு சக்திகளும் ஒன்றுபடுகின்றன
.
கட்டைவிரல் வெளியிலிருந்து
வரும் சக்தி ஆத்மஉணர்ச்சியாகும் ஆள்காட்டிவிரல்
உள்ளிருந்து சக்தி மனஉணர்ச்சியாகும் . கட்டை விரல் பிரபஞ்சம் ( macrocusm ) . ஆள்காட்டி விரல் பிரபஞ்சத்தின் மிகச்சிறிய மாதிரி உருவம்
( microcosm ) .
விரல் நுனியின் சிறப்பு
நமது விரல் நுனிகளின்
அமைப்பைக் கூர்ந்து கவனியுங்கள் . அவை தட்டையாகவோ கூர்மையாகவோ இல்லாமல் பிறைச் சந்திர
வடிவில் வளைவாக அமைந்துள்ளன. விரல் நுனிகளைக் கொண்டு தரையிலுள்ள சிறிய கடுகு ஊசி முதல்
பெரியபொருள் வரை நம்மால் எடுக்க முடிகிறது .
விரல் நுனிகளில் அதிகமான
சக்தி தேங்கியுள்ளது . பழம்பெரும் காலத்தில் ரிஷிகள் விரல் நுனிகளால் ஜபமாலையில் உள்ள
மணிகளை உருட்டி நகர்த்தி ஜபம் செய்தார்கள். கட்டை விரலால் மற்ற விரல்களை வருடுவதன்
மூலம் சக்தி பெற்றார்கள் .
விரல் நுனிகளை மேலும்
கீழும் பக்கவாட்டிலும் அழுத்தும் போது நமக்கு நல்ல உடல்நலம் பெறமுடிகிறது . பல நோய்கள்
தீர்கின்றன . நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன .
விரல் நுனிகளை அழுத்தம் கொடுப்பதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன
1 . விரல் நுனிகளை அழுத்தும்
போது நமது முழு உடலும் நலம் பெறுகிறது .
2 . ” சைனஸ்
”புள்ளிகள் விரல் நுனியில் உள்ளன . ஆகவே விரல் நுனிகளில் அழுத்தம்
கொடுக்கும் போது சைனஸ் பிரச்சனை தீர்கிறது .
3 . நமது விரலில் நமது
முழுஉடலின் பிரதிபலிப்பு உள்ளது . விரலின் நுனியான மேற்பாகம் முகத்தையும், நடுபாகம்
மார்புப் பகுதியையும், அடிபாகம் வயிற்று பகுதியும் குறிக்கிறது . முகத்தின் பிரதிபலிப்புள்ள
விரல் நுனியை அழுத்தும் போது முகத்திலுள்ள கண்ணின் குறைபாடுகள் மூக்கின் குறைபாடுகள்,
வாய் மற்றும் நாக்கின் குறைபாடுகள், முக நரம்புவாதம் காதின் குறைபாடுகள் இவையனைத்தும்
தீருகின்றன .
4 . விரல் நுனிகளில்
நரம்புகளின் முடிவுப் புள்ளிகள் ( PERIPHERAL NERVE ENDINGS ) இருப்பதால்
அவைகள் தூண்டப்பட்டு
உடலின் சக்தி அதிகரிக்கிறது . சுறுசுறுப்பு உண்டாகிறது .
5 . பகல் நேரத்தில் விரல்நுனிகளை
அழுத்தினால் சக்தி கிடைக்கிறது. இரவுநேரத்தில் படுக்கும் போது இதைச் செய்தால் உடனே
தூக்கம்
வரும் .
6 . விரல் நுனிகளை தினமும்
அழுத்தும்போது சாதாரண தலைவலி முதல் மைக்ரேன் தலைவலி வரை குணமடைகிறது.
7 . விரலின் மேற்பகுதி
முகம், அதன் பின்பகுதி நகம் தலைமுடியைக் குறிக்கிறது
. நகங்களுடன் நகங்களை வைத்து உராயும் போது தலைமுடி உதிர்தல் நிற்கிறது . தலைமுடி வளர்கிறது
.
8 . உடலில் எந்தப் பகுதியிலும்
இருக்கும் வலி தீருகிறது.
9 . பல் வலிக்கு இதில்
தீர்வு கிடைக்கிறது . ஆள்காட்டி விரல்நுனி முதல் 2 பற்கள் , நடு விரல்நுனி அடுத்த
2 பற்கள் , மோதிரவிரல் அடுத்த 2 பற்கள் , சிறு விரல்நுனி கடைசி இருபற்கள் எந்தப் பல்லில்
வலி உள்ளதோ அதைச் சார்ந்த விரல் நுனியில் அழுத்தம் கொடுக்கும் போது வலி குறைகிறது
.
10 . விரல் நுனியில்
உள்ள EXTRA புள்ளிகளை அழுத்தும் போது சக்தி கிடைக்கிறது . மயக்கம் அதிர்ச்சி
கோமா இவற்றிற்குத் தீர்வு கிடைக்கிறது .
11 . விரல் நுனிகளில்
அக்குபிரஷர் சக்திப் புள்ளிகள் உள்ளன இவை அனைத்தும் அவசர காலப் புள்ளிகள் . ஒவ்வொரு
புள்ளியையும் அழுத்தும் போது பல நன்மைகள் கிடைக்கின்றன .
12 . முத்திரைகள் விரல்
நுனிகளை கொண்டு செய்யப்படுகின்றன .
ஆக பல சிறப்புகள் கொண்டது
நமது விரலின் நுனிப்பகுதியாகும் . உன் வாழ்க்கை உன்கையில் என்ற முதுமொழி இதற்கும் பொருந்தும்
.