Pages

Universal karma, the karma of life ,

 Universal karma, the karma of life , 

பிரபஞ்ச கர்மா , உயிர்களின் கர்மா
the karma of life
the karma of life

பிரபஞ்ச கர்மாவும் உயிர்களின் கர்மாவும் துவக்கம்

 அன்பர்களுக்கு வணக்கம் பெரிய புத்தகமாக எழுதவேண்டிய தலைப்பை சுறுக்கி ஒருபக்கத்தில் கொடுத்துள்ளேன் எனவே சற்று ஆழ படித்தால்தான் புரிந்தார்போல் இருக்கும் மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கவும் அல்லது நம்  youtube பதிவில் காணவும் . தொடரவும் .

முதன்முதலில் பிரபஞ்சத்தில் துவங்கி பின்பு பஞ்சபூதங்களான ஆகாயம் நிலம் நெறுப்பு காற்று நீர் ஆகியவைகளால் உயிர்கள் படைக்கப்பட்டு பின்பு அதை ஏழு கிரகங்களான சூரியன் சந்திரன் செவ்வாய் குரு சுக்கிரன் புதன் சனி ஆகிய நேர்கிரகங்களால் தாக்கப்பட்டு மீண்டும் இந்த ஏழு கிரகங்களின் நிழல்களால் உருப்பெற்ற ராகு கேது என்னும் மேலும் இரண்டு எதிர்கிரகங்களாலும் உயிர்கள் தாக்கப்பட்டு மீண்டும் இந்த நேர்கிரகங்கள் எதிர்கிரகங்கள் இரண்டிற்க்கும் பாலமாக மாந்தி எனும் கிரகத்தாலும் பூமியில் வாழும் உயிர்கள் பிடிக்கப்பட்டு உயிர்களுடைய உடலையும் மனதையும் உணர்வுகளையும் இவைகள் ஆள்கிறது . இங்குதான் உயிர்களின் கர்மா ( செயல் ) உறுவாகிறது .

மேலும் நேர்மறை எனும் நிஜகிரகங்களும், எதிர்மறை எனும் நிழல் கிரகங்களும் சேர்த்து பெருவெடிப்பை உண்டாக்கி விண்மீன் கூட்டங்களை உருவாக்கி ஆளுகை செய்கின்றன . அவையே நாம்பிறந்த 27 நட்சத்திரங்களாகும் . இவைகளை கொண்டுதான் நம் ஞானியர்கள் கால கணிதத்தை உருவாக்க முனைந்தனர் .

இவைகளை கடந்து இரவுபகல், காலபருவநிலை மாறுதல்கள், கிரகங்களின் ஆட்சி நிலையற்றதாக இருக்க அவைகளின் சுற்றும் இயல்பே என்பதையும் அறிந்து, திதி பட்சம் வாரம் கரணம் யோகம் நட்சத்திரம் ஆகியவைகளை வகைபடுத்தினர் .  நட்சத்திர மாறுதலால் பூமியில் உருவாகும் வேறுபட்ட மனித இயல்புகள் நடவடிக்கைகள் யாவையும் கண்டுணர்ந்தனர் . பின்பு

பிரபஞ்ச சக்தியாலும் மரபணுக்களாலும் உயிர்கள் உருவானாலும் குறிப்பிட்ட விந்தணுக்களால் உருவான உயிர் முந்தைய உயிரின் செயல்பாட்டை பொருத்து குணம் செயல் வாழ்வின் நிகழ்வுகள் யாவும் நடப்பதை அறிந்தனர் . கிரக ஆளுகையும் இதற்க்கு பெரும் உதவியாக மரபணுக்களோடு ஒன்றினைந்து செயல்படுவதை அறிந்தனர் . இங்குதான் முன்னோர்கள் சாட்சியாக ஒவ்வொருவரிடமும் ஒரு அழிவில்லா ஆத்மா இருப்பதை உணர்ந்தனர் . நல்ல மற்றும் தீய செயல்களின் பிரதிபலிப்பு முன்னோர்களின் மூலம் வெளிப்படுவதையும் அதை ஆத்மா பராமறிப்பதையும் அறிந்தனர் .

இது இந்த பிரபஞ்சகூட்டத்தையும் இவைகளின் ஆளுகையும் கடந்து ஏதோஒரு பெரிய சக்தி இருப்பதை காட்டியது அது அனைத்தையும் நிர்வகிக்கிறது என்பதை அறிந்தனர் அந்த சக்திக்கு சூட்டியபெயர்தான் இறைவன் . இந்த இறைசக்தி எல்லாவற்றிலும் ஆளுகை செய்வதை அறிந்து அதன் சக்தியை பெரும் வண்ணம் கண்டுணரப்பட்டதுதான் மந்திரம், தியானம், தவம், ஒழுக்கம், நன்னடத்தை, எவ்வுயிரையும் தம் உயிர்போல் நேசித்தல், அன்பு கொடுத்தல் யாவும் உண்டானது .

இதன் விளைவால் உண்டானதுதான் உணர்வுசக்தி இதன் அடுத்த வளர்ச்சிதான் பக்தி காதல் காமம் ஆசை கோபம் பொறாமை நேசம் பாசம் போன்றவைகளாகும் . இதற்க்கு இறைவனிடம் இருந்து கிடைத்த வரமும் தண்டனையும் என்னதெறியுமா?  பிறப்பு, இறப்பு, இளமை, முதுமை, நோய், வறுமை, வறச்சி ,இயற்கைசீற்றம் ஆகியவையாகும் .

இவைகளை எல்லாம் காணவும் முன்பே உணரவும் கண்டுணரப்பட்டதே ஜோதிடம் எனும் மகாபொக்கிஷமாகும் .

அன்பர்களே நம் கர்மா எப்படி செயல்பட துவங்கியது என்பதை மிக சுறுக்கமாக மட்டுமே கூறியிருக்கிறேன் . இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது அனைத்தையும் அளிக்கிறேன் தொடர்ந்து கண்டுவாருங்கள் அனைவருக்கும் ஆத்மார்த்த நன்றிகள் .