Header Ads Widget

Vastu improper place to set up house ,

 Vastu improper place to set up house ,

வாஸ்து சரியில்லா இடம்

Vastu improper place to set up house
Vastu improper place to set up house

வீட்டை அமைக்க - வாஸ்து முறையற்ற இடம்

நமக்கும் நம் பரம்பரைக்கும் வாழ்வில் அமைக்கும் பாதுகாப்பு அதிஷ்டகவசம் நாம் அமைக்கும் வீடாகும் . இது அருள்கொடுத்துகாக்கும் கோயிலாகும் . எனவே சரியான தேர்வு செய்து நாள் நட்சத்திரம் பார்த்து வீட்டை அமைத்துக்கொண்டால் அது பாதுகாப்பு கவசமாக அனைவருக்கும் இருக்கும் . கீழ்வரும் குற்றங்கள் நம் மனையின் அமைப்பின்போது கண்டுகொள்ளாமல் இருந்தால் வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும் . அதாவது நமக்கு எது பாதுகாப்பு கவசமாக நினைத்தோமோ அந்த வீடே நமக்கு அத்தனை துன்பத்தையும் கொடுத்துவிடும் . எனவே முறையாக அனைத்தையும் சரிபாருங்கள் நல்லதே நடக்கும் .

1)   இடுகாடு அருகில் இடம் அமைவது

2)   பிணம் அறுப்பு நிலையம் அருகாமையில் அமைவது

3)   ஒருபக்கம் மிக உயர்ந்தும் ஒரு பக்கம் மிக தாழ்ந்தும் முரண்பாடுடைய இடமாக பூமி மட்டம் அமைந்து இருப்பது

4)   கோவில் குத்தல் உடைய இடமாக அமைவது

5)   கிணறு மூடிய இடமாக இருப்பின் அவற்றை அறியாமலும் , ஆராய்ந்து பாராமலும் வாங்குவது . அந்த இடத்தில் வீடு இருப்பது ,

6)   ஒருவழி பாதையாக சென்று 3, 4 மடங்குகள் கடந்து சென்று இடத்தை அடைவது

7)   தெற்கு பள்ளமாக நீர் ஓடை அருகாமையில் இருப்பது

8)   பனைமரம் நிழல் வீட்டின் மேல்படுவது

9)   வீட்டிற்கு முன் பட்டமரம் இருப்பது

10) வீட்டிற்கு முன் குட்டிசுவர் இருப்பது

11) வீட்டிற்கு முன் மூலைகுத்தல் இருப்பது

12) மூன்று மூலைகுத்தல் உள்ள இடத்தல் அமைந்த வீடு

13) வாஸ்துசாஸ்திரம் தவறான வீடு ( உள் அளவு , வெளி அளவு வடிவமைப்பில் முறையற்றதாக உள்ள வீடு )

14) முன் கதவு உச்சமும் பின் கதவு நீச்சம் பெற்ற வீடு

15) கூடம் ( பட்டாசாலை ) சிறுத்த வீட்டில் இருப்பது

16) கூடம் இல்லாத வீட்டிலிருப்பது

17) சமையலறை , படுக்கையறை , பொருள் பாதுகாப்பறை மடடும் உள்ள வீடு

18) மரணத்தை ஏற்படுத்தும் நாட்களை அறியாமல் வீட்டு வாசல்கால் நிலையை வைப்பது , பூமி பூஜை செய்வது , கடக்கால் எடுப்பது , பில்லர் குழி தோண்டுவது , கட்டுவது ,தண்ணீர் தொட்டி தோண்டுவது கட்டுவது , முதன்முதல் செங்கல் வைத்து கட்டுவது , போர் போடுவது , ஒட்டு ஒட்டுவது என அறியாமையால் செய்வதால் அந்த வீடடின் உரிமையாளருக்கும் , அவர் குடும்பத்தினருக்கும் எதிர் பாராமலேயே மரணத்துக்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும் . அல்லது உயிர் சேதம் ஏற்படும் .

19) பிரம்மஸ்தானத்தில் சுவர் அல்லது கூச்சம் அல்லது சிறிய அறை அமைவது

20) பிரம்மஸ்தானம் வெளிச்சம் இல்லாத இடமாக அமைவது

21) பிரம்மஸ்தானத்தில்  கழிவு குழி , கிணறு , போர் வெல் அமைவது

22) பிரம்மஸ்தானம் எது என்ற அறியாமல் அங்கு பூமிக்கு அடியில் ரூம் அமைப்பது

23) கட்டிடம் கட்டும்போது வீட்டில் பாம்பு புகுவது அல்லது புகுந்த பாம்பை அடிப்பது அதனால் அந்த வீட்டில் நாக தோசம் ஏற்படுவது

24) வீடு கட்டும்போது , பில்லர் குழி தோண்டும்போது எலும்பு கிடைப்பது அல்லது சாம்பல் கிடைப்பது

25) வீடு கட்டும்போதும், குழிதோண்டும் போதும் பசு அல்லது எருது மாடு குழியில் விழுந்து இறப்பது . இதனால் அந்த இடத்திற்கு பாவ தோஷம் ஏற்படுவது

26) வீடு கட்டும் போது , உயரத்தில் இருந்து விழுந்து இறப்பது அல்லது நீரால் மரணம் , அல்லது நெருப்பு , மின்சாரத்தால் உயிர்சேதம் ஏற்படுவது .

27) வீடு கட்டும்போது மனைவி அல்லது கணவன் அல்லது மகன் , மகள் ஓடிப்போவது .

28) வீடு கட்டும்போது திருடுபோவது , எதிரி ஏறி வந்து வம்பு இழுப்பது , வழுக்கு தொடர்வது . வாஸ்து தோஷத்தால் ஏற்படும் குற்றம் ஏற்படும்.

29) வீடுகட்டி முடித்தப்பின் அல்லது கட்டும்போது தாயார் இறப்பது அல்லது தந்தை அல்லது அண்ணன் தம்பி அல்லது அக்கா தங்கை யாரேனும் ஒருவர் வீட்டில் இறப்பது . இவை அனைத்தும் தவறான வாஸ்து தோஷத்தால் ஏற்படும் குற்றமே ஆகும் .

30) புதுவீடு குடிபுகுந்த பின் கணவன் மனைவி கருத்து வேறுபட்டு பிரிவது .

31) சுவரில் வெடிப்பு உள்ள வீட்டில் இருப்பது .

32) பாம்பு வந்துபோகும் வீட்டில் இருப்பது . ஆந்தை அலரும் மரத்தின் பக்கத்தில் இருப்பது .

33) எப்போதும் துர்நாற்றம் உள்ள இடத்தில் இருப்பது .

34) எப்போதும் சூரிய ஒளியில்லாத வீட்டில் இருப்பது .

35) எருமை மாட்டு பட்டி கிழக்கு திசையிலும், வடக்கு திசையிலும் உள்ள வீடாக அமைவது .

36) கிழக்கு திசை மற்றும் வடக்கு திசையிலும் கழிவு நீர் தேக்கம் துர்நாற்றம் உள்ள வீடாக அமைவது .

37) வீடு கட்டுபவர்கள் ஜாதககிரக நிலைகள் சரியில்லாமல் இருப்பது . அதை அறியாமல் வீடுகட்டி பல துன்பங்களுக்கு ஆளாவது .

38) வீடுகட்டும் யோகம் இருந்தும் எந்த திசை யோகம் என அறியாமல் கட்டி வாழ்க்கையை இழப்பது .

 

ஆக நல்லதொரு குடும்பம் அமைய அனைத்து வாஸ்து குறிப்புகளையும் கடைபிடிப்பது நன்மையைத்தரும் . இந்த காலத்தில் இதைஅயல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வீடே கட்டமுடியாது என்று நினைப்பவர்களும் உண்டு. அது அவர்கள் விதி இதை அவர்கள்தான் மதியால் ஜெயிக்கவேண்டும் .


Post a Comment

0 Comments